கத்தோஹாலன் பகுதியில் ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு; ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதாக தகவல்...
பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சோபியான் பகுதியில் திடீர் ரெய்டு மேற்கொள்ளப்பட்டபோது ராணுவ வீரர்களைத் தாக்கிய ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டதிலிருந்து, பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்கும் பணியில் காவல்துறையினரும், பாதுகாப்பு படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சோபியான் பகுதியில் திடீர் ரெய்டு மேற்கொள்ளப்பட்டது. கத்தோஹாலன் பகுதியில் தீவிரவாதி ஒருவர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த ரெய்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அப்போது, வீரர்கள் மீது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இதில், ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதாகவும், அவர் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான டிஆர்எஃப் அமைப்புடன் தொடர்புடையவர் என காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
அவரிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
இது குறித்த முழுமையானத் தகவல் விரைவில் தெரிவிக்கப்படும் என காஷ்மீர் மண்டல காவல்துறை எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.