Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆகஸ்ட் 1 முதல் இதில் எல்லாம் மாற்றம்.... நினைவில் வைக்க மறந்துதிடாதீங்க...!

01:51 PM Jul 29, 2024 IST | Web Editor
Advertisement

ஆகஸ்ட் 1 முதல் வங்கி மற்றும் நிதி தொடர்பாக நடவடிக்கைகளில் பல்வேறு மாற்றங்கள் அமலாக உள்ளன.

Advertisement

இந்தியாவில் வழக்கமாக ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் நிதி சார்ந்த சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம். தற்போது வருமான வரி செலுத்துவோர் தங்களது கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஜூலை 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் அரசு மற்று தனியார் ஊழியர்கள், தொழிலதிபர்கள், தொழில்முனைவோர் என பலரும் தங்களது வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


ஆகஸ்ட்  1 முதல் வரவுள்ள மாற்றங்கள் குறித்து விரிவாக  பார்க்கலாம்.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிக்குமா? குறையுமா?

எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியில் நிர்ணயிக்கப்படுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை பலரது குடும்பங்களின் செலவில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்துவிட்டால் அது மாத பட்ஜெட்டில் பாதிப்பை உண்டாக்கும்.   

ஜூலை மாதம், 19 கிலோ வணிக சிலிண்டரின் விலையை அரசாங்கம் குறைத்தது. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் தேதியில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

HDFC வங்கியின் வாடிக்கையாளரா நீங்கள் ? - இனி இவற்றிற்கு அதிக கட்டணம்

HDFC வங்கி ஆகஸ்ட் 1 முதல் தங்களது வங்கியின் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களை நேரடியாகப் பாதிக்கும் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. ஹெச்டிஎஃப்சி வங்கியும் அதன் கிரெடிட் கார்டின் விதிகளை மாற்றியுள்ளது.  அதன்படி ஹெச்டிஎஃப்சி வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இப்போது கிரேட் (CRED), பேடிஎம் (Paytm), செக் ( Cheq), மொபிகுவிக் (MobiKwik) மற்றும் ஃப்ரீசார்ஜ் (Freecharge) போன்ற தளங்களைப் பயன்படுத்துபவர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

அதன்படி ரூ.3000க்கும் குறைவான பணபரிவர்த்தனைக்கு 1% வசூலிக்கப்படும். கிரெடிட் கார்டின் நிலுவைத் தொகையை தாமதமாக செலுத்தினால் தொகையைப் பொறுத்து கூடுதலாக ₹ 100 முதல்  1,300 வரை செலுத்த வேண்டும்.

விதிகளை மாற்றும் கூகுள் மேப்ஸ் :

கூகுள் மேப்ஸ் இந்தியாவில் அதன் விதிகளில் மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த விதிகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது. கூகுள் நிறுவனம் இந்தியாவில் தனது சேவைகளுக்கான கட்டணங்களை 70 சதவீதம் வரை குறைத்துள்ளது. இது பயனர்களிடத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

Tags :
Credit CardCredit CardsFinancial Rulehdfclpg cylinder
Advertisement
Next Article