Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியனின் புதிய திரைப்பட பெயர் அறிவிப்பு | #FirstLook போஸ்டரை வெளியிட்டது படக்குழு!

08:15 PM Oct 12, 2024 IST | Web Editor
Advertisement

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தின் பெயர் அறிவிப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisement

கடந்த 2015ம் ஆண்டு தமிழில் வெளியான ‘சகாப்தம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் திரை உலகில் களமிறங்கியவர் தான், மறைந்த கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். தற்போது, இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சண்முக பாண்டியன் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் பொன்ராம் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா திரைப்படங்களை இயக்கி வெற்றி பெற்றவர்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு உசிலம்பட்டியில் நடைபெற்று வருகிறது. சண்முக பாண்டியனுடன் இணைந்து நடிகர் சரத்குமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் காளி வெங்கட், முனீஸ்காந்த் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தில் தார்னிகா என்ற புதுமுக நடிகை கதாநாயகியாக நடிப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். தார்னிகா என்பவர் நாட்டாமை திரைப்படத்தில் டீச்சராக நடித்திருந்த ராணியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : INDvsBAN டி20 போட்டி | டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு!

இந்த திரைப்படத்தில் சண்முக பாண்டியன் ரௌடியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், இப்படத்திற்கு ‘கொம்புசீவி’ எனப் பெயரிட்டுள்ளதை போஸ்டர் வெளியிட்டு தெரிவித்ததுடன் படத்தின் கதை 1996-ல் நிகழ்வதையும் குறிப்பிட்டுள்ளனர்.

Tags :
film teamNews7Tamilnews7TamilUpdatesponramPosterReleased
Advertisement
Next Article