Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மாபெரும் வெற்றி பெற்ற #Maharaja | இயக்குநர் நித்திலன் சாமிநாதனுக்கு BMW காரை பரிசளித்த படக்குழு!

08:21 AM Oct 07, 2024 IST | Web Editor
Advertisement

‘மகாராஜா’ திரைப்படத்தின் வெற்றியை முன்னிட்டு இயக்குநர் நித்திலன் சாமிநாதனுக்கு சொகுசு காரை படக்குழுவினர் பரிசளித்தனர்.

Advertisement

'குரங்கு பொம்மை' திரைப்படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன், நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய திரைப்படம் 'மகாராஜா'. இந்த திரைப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன், அபிராமி, முனிஷ்காந்த், மம்தா மோகன்தாஸ், நட்டி, சிங்கம் புலி, அனுராக் காஷ்யப் உள்ளிட்ட முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது.

விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமான 'மகாராஜா' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, கதாநாயகனாக விஜய் சேதுபதிக்கும் ஒரு நல்ல கம்பேக் திரைப்படமாக அமைந்தது. திரையரங்குகளிலேயே வசூல் ரூ.100 கோடியை தாண்டியது. இதனைத்தொடர்ந்து நெட்பிளிக்ஸ் ஓடிடியில் கடந்த ஜூலை 12ஆம் தேதி வெளியானது. இதிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்தாண்டு வெளியான இந்திய திரைப்படங்களிலேயே அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படங்களில் 'மகாராஜா' முதலிடத்தில் உள்ளது.

இதையும் படியுங்கள் : #TNSchools | காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு!

'மகாராஜா' திரையரங்குகளில் வெளியானது முதல் அனைவரது பாராட்டையும் பெற்றது. அதிலும் குறிப்பாக, ரஜினிகாந்த், விஜய், கமல்ஹாசன் என தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் அனைவரும் 'மகாராஜா' திரைப்படத்தையும், அப்படத்தின் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட படக் குழுவினரை பாராட்டினர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்நிலையில், 'மகாராஜா' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை முன்னிட்டு இயக்குநர் நித்திலன் சாமிநாதனுக்கு BMW காரை படக்குழுவினர் பரிசளித்தனர். இது தொடர்பான புகைப்படங்களை பேஷன் ஸ்டுடியோஸ் தனது சமூக வலைதளப்பகத்தில் பதிவிட்டுள்ளது.

Tags :
directorfilm teamgrand successluxury carnews7TamilUpdatesNithilan Saminathan
Advertisement
Next Article