இயக்குநர் அருண்குமார் திருமணத்தில் ஒன்றுக்கூடிய திரைப்பிரபலங்கள்!
‘பண்ணையாரும் பத்மினியும்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.யூ. அருண்குமார். இதையடுத்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’ ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இதில் சேதுபதி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தொடர்ந்து கடந்த 2023ஆம் ஆண்டு சித்தார்த்தை வைத்து சித்தா படத்தை இயக்கியிருந்தார். இப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தற்போது விக்ரமை வைத்து ‘வீர தீர சூரன் பாகம் 2’ படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற மார்ச் 27ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
இந்த நிலையில் இயக்குநர் எஸ்.யூ. அருண்குமாருக்கு இன்று(பிப்.02) மதுரையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் விக்ரம், விஜய் சேதுபதி, சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.