Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரதமர் மோடியை சந்தித்தார் பிஜி பிரதமர் ரபுகா!

இந்தியாவில் அரசு பயணம் மேற்கொண்டுள்ள பிஜி பிரதமர் சிதிவேனி லிகமமடா ரபுகா டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்.
02:34 PM Aug 25, 2025 IST | Web Editor
இந்தியாவில் அரசு பயணம் மேற்கொண்டுள்ள பிஜி பிரதமர் சிதிவேனி லிகமமடா ரபுகா டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்.
Advertisement

தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான பிஜியின் பிரதமர் சிதிவேனி லிகமமடா ரபுகா இந்தியாவில் 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் இந்தியாவில் அரசு பயணம் மேற்கொள்வது. இதுவே முதல் முறையாகும். ரபகாவுடன் மூத்த அதிகாரிகள் கொண்டஉயர்மட்டக்குழுவும் இந்தியா வந்துள்ளனர்.

Advertisement

டெல்லி விமான நிலையம் வந்த ரபகாவை மத்திய மந்திரி சுகந்தா மஜும்தார் வரவேற்றார். இந்த நிலையில், டெல்லியில்பிரதமர் மோடியை பிஜி பிரதமர், சிதிவேனி லிகமமடா ரபுகா சந்தித்தார்.அப்போது இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

மேலும் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிப்பது குறித்தும் அவர்கள் விவாதித்தனர். தொடர்ந்து ரபுகா மற்றும் அவருடன் வந்த குழுவினருக்கு பிரதமர் மோடி மதிய விருந்து அளிக்கிறார்.

இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பில் பிஜி முக்கியமான நாடாக உள்ளது. முன்னதாக இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த ஆண்டு பிஜி நாட்டுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அதைத்தொடர்ந்து பிஜி பிரதமர்  இந்தியாவில் பயணம் மேற்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :
fijifijipmlatestNewsPMModirabukha
Advertisement
Next Article