#ParisOlympics2024 நடுவானில் போர் விமான அணிவகுப்பு நடத்தி வரவேற்பு - பதக்கம் வென்று தாயகம் திரும்பிய வீரர்களுக்கு தைவான் அரசு கௌரவம்!
ஒலிம்பிக்கில் பதக்கங்களை வென்று நாடு திரும்பிய தங்களது நாட்டு வீரர்களுக்கு வானத்திலேயே போர் விமான அணிவகுப்பு நடத்தி தைவான் அரசு கௌரவித்துள்ளது.
பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் நடைபெற்றுவந்த 33-ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக நிறைவடைந்தது. பாரீஸ் நகரில் கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் போட்டி, 17 நாள்கள் நடைபெற்று, ஆகஸ்ட் 11ம் தேதி இரவு நிறைவடைந்தது. அமெரிக்கா 126 பதங்களுடன் பதக்கப்பட்டியிலில் முதலிடத்தை பிடித்தது. சீனா, ஜப்பான் நாடுகள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.
இந்தியா தரப்பில் 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களுடன் 71 ஆவது இடத்தையும் பிடித்தது. அர்ஜென்டீனா, எகிப்து, துனீசியா தலா 1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 3 பதக்கங்களை பெற்றுள்ளது. பாகிஸ்தான் நாடு ஒரே ஒரு தங்கம் மட்டுமே எடுத்து 62வது இடத்தை பிடித்தது.
தைவான் நாடு ஒலிம்பிக்கில் 2 தங்கம், 5 வெண்கலம் என மொத்தம் 7பதக்கங்களை வென்றுள்ளது. இதுவரை இல்லாத வகையில் இந்த முறைதான் தைவான் வீரர்கள் அதிக பதக்கங்களை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.