Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"ஐந்தரை அடி இமயம்.." - யுவன் இசையில் கலைஞர் 100ஆண்டு விழாவிற்காக தயாராகி வரும் பாடல்.!

08:34 AM Dec 28, 2023 IST | Web Editor
Advertisement

 கலைஞர் 100ஆண்டு விழாவிற்காக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில்   "ஐந்தரை அடி இமயம்.."  எனத் தொடங்கும் பாடல் தயாராகி வரும் வீடியோவை இயக்குநர் லிங்குசாமி வெளியிட்டுள்ளார்.

Advertisement

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் திரைத்ததுறையில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து கலைஞர் 100 என்ற மாபெரும் கலைஞர் நூற்றாண்டு விழா டிசம்பர் 24.12.2023 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவித்திருந்தது.

இதனிடையே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் கனமழை பெய்த நிலையில்,  மக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகி உள்ளதாலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அரசு நிர்வாகமும் மக்களுக்கான நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். எனவே இதனை கருத்தில் கொண்டு டிச. 24-ம் தேதி நடைபெறவிருந்த கலைஞர் நூற்றாண்டு விழா 06.01.2024 சனிக்கிழமை அன்று மாலை நடைபெறும் என்று திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது.

கலைஞர் 100 விழா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இருந்து, கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ரஞ்சிக்கோப்பை போட்டிகள் சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளதால்  இடவசதிக்காகவும் புதிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இதற்கான பூமி பூஜையும் சமீபத்தில் நடைபெற்றது.

jஇந்த நிலையில் கலைஞர் நூற்றாண்டு நிகழ்ச்சிக்காக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில், பாடகர் விஜய் யேசுதாஸ் குரலில் உருவாகும் பாடலின் வீடியோ கிளிம்ப்ஸை இயக்குநர் லிங்குசாமி வெளியிட்டுள்ளார். அந்த பாடல் நீ.. ஐந்தரை அடி இமயம் என தொடங்கும்படி தயாரிக்கப்பட்டுள்ளது.

Tags :
கலைஞர் 100kalaignarKalaignar 100Kalaignar 100th Yeartamil cinemaYuvan shankar raja
Advertisement
Next Article