Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

" தமிழ்நாடு முழுவதும் குறைவான பட்டாசு விபத்து அழைப்புகளே வந்துள்ளன " - 108 அவசர உதவி மையம் தகவல்

03:48 PM Nov 12, 2023 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு முழுவதும்  குறைவான பட்டாசு விபத்து அழைப்புகளே வந்துள்ளது
108 அவசர உதவி மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று கொண்டபட்டு வருகிறது. காலை முதலே
பொதுமக்கள் புத்தாடைகள் உடுத்தி பட்டாசுகளை வெடித்து வருகின்றனர் இந்நிலையில் பாதுகாப்பற்ற முறையில் பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட
வாய்ப்புகள் உள்ளதால் தேனாம்பேட்டையில் உள்ள 108 அவசர உதவி மையத்தில்
கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பட்டாசு வெடித்து விபத்திற்குளான நபர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அழைத்து
செல்ல சென்னை முழுவதும் 1353 ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் உதவி எண்களுக்கு அழைப்பவர்களுக்கு பதிலளிக்க 50-க்கும் மேற்பட்டோர்
பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பட்டாசு வெடித்து தீ காயம் ஏற்பட்டோரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம்
அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று தீக்காய சிறப்பு பிரிவில் அவர்களுக்கு
சிகிச்சை அளிக்கப்படுகிறது. பாதுகாப்பற்ற முறையில் பட்டாசு வெடித்ததில் நெமிலிச்சேரி பகுதியில் இருந்து ஒருவரும், ஆவடியில் இருந்து ஒருவர் என 2 பேர் பட்டாசு தீக்காயங்களுடன் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அவர்களுக்கு இரண்டு சதவீத தீக்காயங்களே ஏற்பட்டுள்ளதாகவும் இருவரும் நலமுடன் இருப்பதாகவும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இன்று காலை 12 மணி முதல் தற்போது வரை 4000 அழைப்புகள் 108 அவரச உதவி
மையத்திற்கு வந்துள்ளது, அதில் 2100 அவசர சிகிச்சை அழைப்புகள் வந்துள்ளது

அதில் தற்போது வரை தமிழ்நாடு முழுவதும் 20-க்கும் குறைவான பட்டாசு விபத்து
அழைப்புகளே வந்துள்ளது. மாலை நேரங்களில் விபத்துகள் அதிகம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் மாலை நேரங்களில் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தபட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டது.

Tags :
'Diwali CrackersAccidentDiwali
Advertisement
Next Article