பாரம்பரிய உடை, இசை, நடனம் | கோத்தர் பழங்குடியினரின் திருவிழா!
நீலகிரியில் கோத்தர் பழங்குடிகள் 7 கிராமங்களில் இயற்கையையும் குல தெய்வமான அய்யனோர் அம்மனோரை வழிபடும் திருவிழா நடைபெற்றது.
விவசாயம் செழிக்க, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நோய் நொடியின்றி வாழ
கோத்தர் பழங்குடியினர் மக்களால் இரவு முழுவதும் ஆடல் பாடல் நிகழ்ச்சியுடன்
கொண்டாடப்படும் அய்யனூர் அம்மனூர் விழா, நூற்றாண்டை கடந்து பாரம்பரியமாக கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், இருளர், பனியர், காட்டு நாயக்கர், குறும்பர் என 6 வகை பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்கள் தங்களுக்கென தனித்தனி பாரம்பரிய கலாசாரத்தைக் கொண்டு, இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றனர். பாரம்பரிய உணவு, உடை, இசைக்கருவிகள், நடனம், பாடல் வழிபாடு போன்றவற்றோடு தனித்தன்மையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில், கோத்தர் பழங்குடியினர் மக்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஜனவரி மாதம் 10 நாட்கள் தங்களது குலதெய்வமான அய்யனூர், அம்மனூர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த ஆண்டிற்கான அய்யனூர், அம்மனூர் விழா உதகை அருகே உள்ள திருச்சிக்கடி கிராமத்தில் நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : உக்ரைன் நடத்திய தாக்குதலில் பற்றி எரியும் ரஷ்ய எண்ணெய் கிடங்குகள்!
இதையடுத்து, திருவிழாவின் ஒரு பகுதியாக இரவு நேரத்தில் இறைவனை வரவேற்கும் வகையில் கோயில் முன்பு உள்ள மைதானத்தில் தீயிட்டு சிறு குழந்தை முதல் முதியவர்கள் வரை தங்களது பாரம்பரிய இசையுடன் நடனமாடி கொண்டாடுகின்றனர்.
விவசாயம் செழிக்கவும், நோய்நொடி இன்றி மக்கள் வாழவும் விடிய விடிய ஆடல் பாடல்
நிகழ்ச்சி நடைபெற்றது. கோத்தர் பழங்குடியினர் மக்களின் இந்த பாரம்பரிய
திருவிழா நூற்றாண்டு கடந்து தற்போது வரை கலாச்சாரம் மாறாமல் நடைபெறுவது
குறிப்பிடத்தக்கது.