பிப்ரவரி 29.. பிப்ரவரி 29.. லீப் ஆண்டை நினைவூட்டிய கூகுள்..
“ஒருநாள் கூடுதலுடன் அடுத்த மாதத்திற்கு தாவுகிறேன்” என சிரிப்பு எமோஜியுடன் லீப் ஆண்டை வரவேற்கும் விதமாக கூகுள் அனைவருக்கும் நினைவூட்டியுள்ளது.
ஓர் ஆண்டு என்பது சூரியனை பூமி சுற்றிவரும் காலமாகும். பூமி சூரியனை சுற்றிவர 365 1/4 நாட்கள் ஆகிறது. அப்போது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாள் கூடுதலாகிறது. ஆகவே ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாள் கூடுதலாகும். அந்த ஆண்டு லீப் ஆண்டு என அழைக்கப்படுகிறது. லீப் ஆண்டு 366 நாட்கள் கொண்ட ஆண்டாகும். இந்த கூடுதல் ஒரு நாளை பிப்ரவரி மாதத்தில் சேர்த்து 29 நாட்கள் இருக்கும் படி கணக்கிட்டுள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு லீப் ஆண்டு வந்தது. அந்த வகையில் இந்த வருடமும் ஒரு லீப் ஆண்டாகும். இன்று பிப்ரவரி 1 ஆம் தேதியாகும். இந்த லீப் ஆண்டை முன்னிட்டு கூகுள் இந்தியா தனது எக்ஸ் தளத்தில் ஒரு இடுகையை பதிவிட்டுள்ளது. அதில்,
ஒவ்வொரு நான்கு ஆண்டிற்கும் ஒரு லீப் ஆண்டு ; வணக்கம் எப்படி இருக்கிறீர்கள் ?
“ஒருநாள் கூடுதலுடன் அடுத்த மாதத்திற்கு தாவுகிறேன்” என சிரிப்பு இமோஜுடன் லீப் ஆண்டை குறிப்பிட்டுள்ளது.
இந்தப் பதிவிற்கு பலர் கருத்து தெரிவித்தும், பதிவை பலர் பகிர்ந்தும் வருகின்றனர்.