Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வேகமாகச் சுழலும் பூமி! கடிகாரங்களில் 1 விநாடியைக் கழிக்க விஞ்ஞானிகள் திட்டம்!

12:46 PM Mar 29, 2024 IST | Web Editor
Advertisement

பூமி முன்பு இருந்ததை விட சற்று வேகமாகச் சுழல்வதால்,  கடிகாரங்கள் ஒரு நொடியைத் தவிர்க்க வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

நீண்டகாலமாக,  பூமி பொதுவாக வேகம் குறைந்தும்,  அதிகரித்து வருகிறது. அந்த விகிதம் அவ்வப்போது மாறுபடுகிறது என்று தேசிய தரநிலைகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் நேரம் தெரிவித்தது.  இந்நிலையில், புவியில் ஏற்பாடும் காலநிலை மாற்றம் மற்றும் பல்வேறு காரணங்களால்,  கடிகாரத்தில் இருந்து ஒரு வினாடியைக் கழிப்பதை குறித்து,  பல உலக நேரக் கண்காணிப்பாளர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : “அம்பானிக்கும், அதானிக்குமானது தான் பாஜக ஆட்சி” - கனிமொழி எம்.பி விமர்சனம்!

இதையடுத்து,  பூமி முன்பு இருந்ததை விட சற்று வேகமாகச் சுழல்வதால்,  கடிகாரங்கள் ஒரு நொடியைத் தவிர்க்க வேண்டும் என உலக நேர ஆராய்ச்சியாளர் தெரிவிக்கின்றனர்.  இது "எதிர்மறை லீப் செகண்ட்" என்று அழைக்கப்படுகிறது.

சான் டியாகோவின்,  கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள புவி இயற்பியலாளரான டங்கன் அக்னிவ் கூறுகையில்,   "பூமியின் சுழற்சியில் இது ஒரு பெரிய மாற்றம் இல்லை. நாங்கள் மிகவும் அசாதாரணமான நேரத்தில் இருக்கிறோம்.  பூமியின் இரு துருவங்களிலும் பனி உருகுவது,  கிரகத்தின் வேகம் உள்ளிட்டவையால் உலகளாவிய வினாடி கணக்கீடு செய்ய சுமார் மூன்று ஆண்டுகள் ஆகும்.  நாங்கள் எதிர்மறையான லீப் வினாடியை நோக்கிச் செல்கிறோம்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, 1972 ஆம் ஆண்டு தொடங்கி,  சர்வதேச நேரக் கண்காணிப்பாளர்கள் அணு நேரத்தைப் பிடிக்க வானியல் நேரத்திற்கு ஜூன் அல்லது டிசம்பரில் "லீப் செகண்ட்" சேர்க்க முடிவு செய்தனர்.  இது ஒருங்கிணைந்த யுனிவர்சல் டைம் அல்லது யுடிசி என்று அழைக்கப்படுகிறது.  11:59 மற்றும் 59 வினாடிகள் நள்ளிரவாக மாறுவதற்குப் பதிலாக, 11:59 மற்றும் 60 வினாடிகளுக்கு மற்றொரு வினாடி இருக்கும்.  1972 மற்றும் 2016 க்கு இடையில், பூமியின் வேகம் குறைந்ததால் 27 தனித்தனி லீப் வினாடிகள் சேர்க்கப்பட்டன. இதையடுத்து, வேகம் குறைந்து கொண்டு வந்தது.

இந்நிலையில்,  2022 ஆம் ஆண்டிலிருந்து 2030 ஆண்டு வரை லீப் வினாடியைச் இணைக்குவதற்கான அல்லது நீக்குவதற்கான தரநிலைகளை மாற்றியமைக்க உலகின் நேரக் கண்காணிப்பாளர்கள் முடிவு செய்தனர்.  இது குறித்த ஆய்வில் உலகின் நேரக் கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 

Tags :
climate changesClockearthearth rotationleap secondTimeWeather
Advertisement
Next Article