Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விவசாயிகள் போராட்டம் - மார்ச் 12ம் தேதி வரை டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு.!

08:11 AM Feb 13, 2024 IST | Web Editor
Advertisement

இன்று விவசாயிகள் போராட்டம் நடைபெற உள்ள மார்ச் 12ம் தேதி வரை டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200-க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் வரும் பிப்.13ம் தேதியான இன்று ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் பேரணி நடத்தப் போவதாக அறிவித்தன. இதற்காக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பலரும் டெல்லியை நோக்கி புறப்பட்டு வருகின்றனர். 

Advertisement

கடந்த 2021-ம் ஆண்டு ஜன.26-ம் தேதி நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது அம்மாநில தெருக்களில் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையில் நடந்த மோதல் மீண்டும் நடந்து விடக்கூடாது என்பதற்காக விவசாயிகள் பேரணியை எதிர்கொள்ள டெல்லி போலீசார் அனைத்து விதங்களிலும் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி எல்லைப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வேளாண் பொருள்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வமான அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை டெல்லியில் அமர்ந்து போராட்டம் நடத்துவார்கள் எனவும் தகவல் கிடைத்தது. இதையொட்டி, டெல்லியில் குறிப்பாக வடகிழக்கு டெல்லி பகுதிகளில் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 144-வது பிரிவின்படி தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது என டெல்லி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

அந்த வகையில் அண்டை மாநிலங்களிலிருந்து டெல்லிக்கு விவசாயிகள்அணி திரண்டால் அதைத் தடுக்க நூற்றுக்கணக்கான போலீஸார் எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதே போன்று பஞ்சாப் - ஹரியாணா எல்லைகளில் ‘டெல்லி சலோ பேரணி’யை முறியடிக்கும் விதமாக அம்பாலா, ஜிந்த், ஃப்தேஹாபாத் போன்ற மாவட்ட எல்லைகளை மூடுவதற்கு விரிவான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

ஹரியானாவின் 7 மாவட்டங்களில் இணைய சேவை ரத்து, குறுஞ்செய்திகளுக்கான தடை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாநில காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிப்ரவரி 12ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு அடுத்த ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 12ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Tags :
144 imosedDelhi ChaloDelhi policefarmers protest 2024Farmers protest todayformer protest
Advertisement
Next Article