Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மயிலாடுதுறை அருகே சர்க்கரை ஆலையை மதிப்பீடு செய்ய வந்த வருவாய்த்துறையினரை கண்டித்து விவசாயிகள் போராட்டம்!

09:51 PM Nov 30, 2023 IST | Web Editor
Advertisement

மயிலாடுதுறை அருகே நீதிமன்ற உத்தரவினால் சர்க்கரை ஆலையை மதிப்பீடு செய்ய வந்த வருவாய்த்துறையினரை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை 1987-ம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டது.  1993-ம் ஆண்டு 1,500 டன் கரும்பு பிழியும் திறனை 3,500 டன் கரும்பு பிழியும் திறன்கொண்டதாக மாற்றப்பட்டு ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டது.   அந்த வேலையை தனியார் நிறுவனம் ஒன்று செய்தது.   இந்த விரிவாக்க பணிகள் முறையாக செய்யாததால் 3,500 டன் முழு கொள்ளளவை அரைக்க இயலாமல் ஆலை நட்டத்தில் இயங்கியது.

இதனால் தனியார் நிறுவனத்திற்கு ரூ. 2 கோடி பாக்கியை ஆலை நிர்வாகம் வழங்கவில்லை.  இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் தனியார் நிர்வாகம் வழக்கு தொடுத்து, அபராதத்துடன் சேர்த்து சுமார் ரூ.6 கோடி பெறுவதற்கான உத்தரவை பெற்றதாக கூறப்படுகிறது.  இதனிடையே கடந்த 2017-ம் ஆண்டு ஆலை மூடப்பட்டுவிட்டது.  ஆலை நிர்வாகம் தனியார் நிறுவனத்திற்கு நிலுவை தொகை வழங்கவில்லை.  இதனால் மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றம் மூலம் தனியார் நிறுவனத்தினர் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்று மனு அளித்தனர்.

இதையும் படியுங்கள்: சென்னை மழை பாதிப்பு | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…

இதனால் என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் இடங்களை கையகப்படுத்த, 38 சர்வே இடங்களில் ஆய்வு செய்து அதன் மதிப்பை அறிவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் மயிலாடுதுறை நீதிமன்ற ஊழியர்கள், வருவாய்துறை அலுவலர்கள், நில அளவை துறையினர், போலீஸ் பாதுகாப்புடன் ஆலையின் கட்டடம் மற்றும் சில பகுதிகளின் மதிப்பீடு பணியை கடந்த 28-ம்தேதி துவங்கினர்.  இதற்கு கரும்பு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில் 2-வது முறையாக  மதிப்பீடு செய்ய வந்த நீதிமன்ற உத்தரவு கட்டளை ஊழியர்களை ஆலையின் உள்ளே செல்ல விடாமல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், கரும்பு விவசாயிகள் சங்கம், சி ஐ டி யு தொழிற்சங்கத்தினர் கோஷங்களை எழுப்பி தடுத்து நிறுத்தினர்.   தமிழக அரசு சர்க்கரை ஆலையை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதனால்  நீதீமன்ற ஊழியர்கள் மதீப்பீடு செய்யாமல் திரும்பி சென்றனர்.

Tags :
farmersMayiladuthurainews7 tamilNews7 Tamil UpdatesProtest
Advertisement
Next Article