Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஒரே நேரத்தில் 2 திரைப்படங்களில் நடிக்கும் ஃபகத் பாசில்!

04:29 PM Mar 19, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் ஃபகத் பாசில் ஒரே நேரத்தில் ஆக்சிஜன் மற்றும் Don't trouble the trouble ஆகிய 2 திரைப்படங்களில் நடிக்கவுள்ளார்.  

Advertisement

இயக்குநர் மாரி செல்வராஜ்,  பிரபல நடிகரும்,  அமைச்சருமான உதயநிதியை கதாநாயகனாக வைத்து இயக்கிய திரைப்படம் 'மாமன்னன்'.  இந்த திரைப்படத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியும்,  ஆழமான அரசியலும் பேசப்பட்டிருந்தது.  இந்த படத்தில், மாமன்னன் கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருந்த நிலையில்,  ஃபகத் பாசில் ரத்னவேலு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் கடந்த ஜூன் மாதம் வெளியாகி, மிகப்பெரிய வெற்றி பெற்றது.  குறிப்பாக 35 கோடிக்கு எடுக்கப்பட்டு,  சுமார் 55 கோடி வரை பாக்ஸ் ஆபிசில் வசூலை வாரி குவித்தது.  இத்திரைப்படத்தில் ஃபகத் பாசில் நடித்த ரத்னவேலு என்ற கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.  இந்த படத்தை தொடர்ந்து, வடிவேலு மற்றும் ஃபகத் ஃபாசில் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில்,  நடிகர் ஃபகத் ஃபாசில்,  'ஆக்சிஜன்' மற்றும் 'Don't trouble the trouble' ஆகிய 2 படங்களில் நடிக்கவுள்ளார்.  இந்த 2 படங்களையும் பிரபல இயக்குநர் ராஜமவுலியின் மகன் கார்த்தி தயாரிக்கிறார்.  ஆக்சிஜன் என்ற படம் நண்பர்களுக்குள் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தியும்,  Don't trouble the trouble என்ற படம் திரில்லர் படமாகவும் உருவாக உள்ளது.

Advertisement
Next Article