Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கேரளாவில் குவிந்த ரசிகர்கள்! - கூட்ட நெரிசலில் சேதமான விஜய் கார்!

09:09 AM Mar 19, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் விஜய் 'GOAT' படப்பிடிப்பிற்காக நேற்று (மார்ச் 18) கேரளா சென்ற நிலையில், ரசிகர்கள் கூட்டத்தில் அவருடைய காரை சேதாரமாகிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

'லியோ'  திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் 'The Greatest of All Time' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்யின் 68வது திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும், இந்த திரைப்படத்தில் த்ரிஷா கேமியோ ரோலில்  நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'GOAT'  திரைப்படத்தில்  யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த திரைப்படத்தின் பூஜை கடந்த ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி நடைபெற்றது. 'GOAT' திரைப்படம் சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் தொடங்குவதாகவும் அதில் விஜய் அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்களில் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் படம் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள் : பிரதமர் மோடியின் நல்லாட்சி தொடர பாஜகவுடன் கூட்டணி – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி!

இந்நிலையில், 'GOAT'  திரைப்படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் நேற்று (மார்ச் 18) மாலை திருவனந்தபுரம் சென்றார். அவருடைய வருகைக்காக ரசிகர்கள் மதியத்திலிருந்து விமான நிலையத்தில் காத்திருந்தனர். மாலை 5 மணியளவில் நடிகர் விஜய் வந்ததும் அவரது காரைச் சுற்றி ரசிகர்கள் உற்சாகத்துடன் ஆர்ப்பரித்தனர். அவர்களுக்கு கையசைத்து வணக்கம் சொல்லி நடிகர் விஜய் அவர்களுடைய அன்பை ஏற்றுக்கொண்டார்.

ஆனால் அங்கு கூடி இருந்த கூட்டத்தால் அவருடைய கார் சேதாரமாகி உள்ளது. காரின் கண்ணாடி உடைந்தது, கதவுகள் நசுங்கியிருப்பது என விஜய் வந்துள்ள கார் சேதமாகியுள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. ரசிகர்கள் காரின் மீது ஏறி 'தளபதி, அண்ணா' என்று ஆர்ப்பரித்தனர். இதனால், விஜய் வந்துள்ள கார் மொத்தமாக சேதாரமாகியுள்ளது.

Tags :
#damagedcarfansgatheredKeralarushvijay
Advertisement
Next Article