பிரபல தென்கொரிய நடிகர் #China-வில் மரணம்… காரணம் என்ன?
தென் கொரிய நடிகர் பார்க் மின் ஜே உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தென் கொரிய நடிகர் பார்க் மின் ஜே (32). இவர், தி கொரியா-கிதான் போர், டுமாரோ, லிட்டில் வுமன் உள்ளிட்ட கொரியன் தொடர்களில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்திருந்தார். இந்த நிலையில், இவரின் இறப்பு குறித்த தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிக் டைட்டில் மற்றும் கே-மீடியா ஏஜென்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"நடிப்பை விரும்பி எப்போதும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்த நடிகர் பார்க் மின்-ஜே சொர்க்கத்திற்கு சென்றுவிட்டார். நடிகர் பார்க் மின்-ஜே மீதான உங்கள் அன்புக்கும் ஆர்வத்திற்கும் மிக்க நன்றி. இனி அவரின் நடிப்பை பார்க்க முடியாவிட்டாலும், சிறந்த நடிகராக அவரை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்வேன். அவரின் ஆத்மா சாந்தியடைந்த பிரார்த்திப்போம்"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்க் மின் ஜே -வின் இறப்பு செய்தி நேற்று அறிவிக்கப்பட்டாலும் அவர் கடந்த நவ.29ம் தேதி சீனாவில் பயணம் செய்துக்கொண்டிருந்தபோது உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. அவரின் இறுதிச்சடங்கு நாளை (டிச.4) காலை 9.30 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.