Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரபல பைக்கர் டாட்டியானா ஓசோலினா விபத்தில் உயிரிழப்பு!

02:40 PM Jul 25, 2024 IST | Web Editor
Advertisement

ரஷ்யாவின் பிரபல பைக்கர் டாட்டியானா ஓசோலினா விபத்தில் உயிரிழந்துள்ளார்.

Advertisement

ரஷ்ய பைக்கர் மற்றும் சமூக ஊடக செல்வாக்கு மிக்க டாட்டியானா ஓசோலினா (Tatyana Ozolina), 'MotoTanya' என்ற பெயரில் பிரபலமாக அறியப்பட்டவர். இவர் துருக்கியிலுள்ள மிலாஸ்-சேக் நெடுஞ்சாலையில் தனது பைக்கில் நண்பர்களுடன் சென்றுக் கொண்டுள்ளார். அப்போது இவரது பைக் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்நிலையில், இந்த விபத்தில் பலத்த காயமடைந்த டாட்டியானா ஓசோலினா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அவரது ரசிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, டாட்டியானா ஓசோலினாவுடன் சென்ற இரண்டு நண்பர்கள் இந்த விபத்தில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : “பென்னிகுவிக்கை தலைமுறைகள் கடந்தும் கவுரவப்படுத்தும் தமிழர்கள்” – இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஒலித்த குரல்!

இதனைத் தொடர்ந்து, கடந்த 2023 ஆம் ஆண்டில் டாட்டியானா ஓசோலினா ஆண்டின் சிறந்த மோட்டோபிளாகர் மற்றும் 2024ம் ஆண்டு இந்த ஆண்டின் சிறந்த பிளாகர் என்றும் கௌரவிக்கப்பட்டார். அவரது இறுதி சமூக ஊடக பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :
bikerdiedFamous bikerfansmotorcycle crashrussiaTatiana OzolinaTurkey
Advertisement
Next Article