Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#USElectionResults2024 | பொய்யான கருத்துக்கணிப்புகள் - தொடர் முன்னிலையில் டொனால்ட் ட்ரம்ப்!

10:39 AM Nov 06, 2024 IST | Web Editor
Advertisement

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும்நிலையில், கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி, ட்ரம்ப் முன்னிலை வகித்து வருகிறார்.

Advertisement

அமெரிக்காவின் தற்போதைய அதிபராக ஜோ பைடன் உள்ளார். 2020-ல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் பதவிக்காலம் வரும் ஜனவரியோடு முடிவடைய உள்ளது. இதனையடுத்து அதிபர் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை இந்த ஆண்டு தொடக்கத்திலியே அமெரிக்க அரசு ஆரம்பித்தது.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. மேலும் அந்நாட்டு சட்டப்படி நவம்பர் முதல் செவ்வாய்க்கிழமையன்றுதான் அதிபர் தேர்தல் நடைபெறும். அதன்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கிய அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 5.30 மணிக்கு ( இந்திய நேரப்படி) முடிவடைந்தது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று வருகிறது.

இந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட்டார். பல கட்சிகள் போட்டியில் இருந்தாலும், ட்ரம்புக்கும், கமலா ஹாரிஸுக்கும் தான் கடும் போட்டி நிலவி வருகிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக இருந்த நிலையில், தற்போது அவை அனைத்தும் பொய்யாகி, ட்ரம்ப் முன்னிலை பெற்று வருகிறார்.

அமெரிக்க ஜனாதிபதியை மக்கள் நேரடியாக தேர்ந்து எடுப்பதில்லை. எலக்டோரல் காலேஜ் (தேர்வுக்குழு உறுப்பினர்கள்) முறைப்படி வாக்குப்பதிவு நடக்கிறது. மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 270 பேரின் ஆதரவை யார் பெறுகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள்.

40 எலக்டோரல் வாக்குகளை கொண்ட டெக்சாஸ், வட கரோலினா போன்ற மாகாணங்களில் ட்ரம்ப் வெற்றிப் பெற்றுள்ளார். பென்சில்வேனியாவில் முன்னிலை வகித்து வருகிறார். 210க்கும் மேற்பட்ட வாக்குகளுடன் ட்ரம்ப் முன்னிலை வகித்து வருகிறார். கலிபோர்னியா, விர்ஜினியா நியூ மெக்சிகோ, நியூயார்க் போன்ற மாகாணங்களில் கலமா ஹாரிஸ் வெற்றிப் பெற்றுள்ளார். அவர் 150 மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தற்போது வரை அதிக இடங்களில் ட்ரம்ப் முன்னிலை வகித்து வரும் நிலையில், அவர்தான் அடுத்த அதிபராக வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். கருத்துக் கணிப்புகளில் ஹாரிஸ்தான் வெற்றிப் பெறுவார் எனக் கூறப்பட்ட நிலையில் அவை அனைத்தும் பொய்யாகி உள்ளன. இன்று மாலையே யார் அதிபர் என தெரியவரும். இல்லையேல் நாறை அறிவிக்கப்படும்.

Tags :
Donald trumpKamala harris
Advertisement
Next Article