Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சரிவை சந்தித்து வரும் பூக்களின் விலை - குப்பையில் கொட்டப்படும் அவலம்!

07:15 AM Feb 04, 2024 IST | Web Editor
Advertisement

பூக்களின் விலை கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால்  குப்பையில் கொட்டப்படும் அவலம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

Advertisement

பூக்களின் விலை கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால்  குப்பையில் கொட்டப்படும் அவலம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். சரியான விற்பனை இல்லாததால் தினந்தோறும் 10-டன் பூக்கள் குப்பையில் கொட்டப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் பூக்கடைகள் நிரந்தரமாக மூடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என விற்பனையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு மாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வரும் பூக்கள் வரத்து சற்று மந்த நிலையிலேயே உள்ளது.  கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மாற்றப்பட்டதன் எதிரொலியாக பொங்கல் பண்டிகையில் இருந்தே பொதுமக்களின் விற்பனை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது

நாளுக்கு நாள் பூக்களின் விற்பனை மந்தமாகி வரும் நிலையில் கோயம்பேடு சந்தையில் விற்பனை ஆகாத பூக்களை தினமும் டன் கணக்கில் குப்பையில் கொட்டப்படுகிறது. பூக்களின் விற்பனை இது போன்று தொடர்ந்தால் பூ விற்பனையாளர்களின் வாழ்வதாரம் கேள்விக்குறியாகும் என விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags :
FlowersKOYAMBEDU MARKETpricereduce
Advertisement
Next Article