Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாளை நியாய விலைக் கடைகள் இயங்கும்... #TNGovt அறிவிப்பு!

09:40 AM Aug 30, 2024 IST | Web Editor
Advertisement

ஆகஸ்ட் 31ம் தேதி  மாநிலம் முழுவதும் அனைத்து நியாய விலைக்கடைகளும் இயங்கும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.

Advertisement

தமிழ்நாடு முழுவதும் இயங்கும் அனைத்து உணவு பொருள் வழங்கும் அலுவலகம் மற்றும் நியாய விலைக்கடைகளுக்கு மாதத்தின் கடைசி நாளில் எப்போதும் விடுமுறையாக இருக்கும். ஆனால் இந்த மாதம் அதாவது ஆகஸ்ட் 31ம் தேதி அனைத்து நியாய விலைக்கடைகளும் இயங்கும் என்றும் இதனால், ரேஷன் அட்டை தாரர்கள் இந்த மாதம் வாங்காத பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.

மேலும் நியாய விலைக் கடைகளை திறக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கூட்டுறவுத் துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து கூட்டுறவுத் துறை உயரதிகாரிகள் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

வரும் சனிக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளையும் திறந்து வைத்து அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டும். அவ்வாறு நியாயவிலைக் கடை திறக்காத விற்பனையாளர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். இதனை கூட்டுறவு சார்பதிவாளர், முதுநிலை ஆய்வாளர் ஆகியோர் கவனத்தில் கொள்ள வேண்டும். நியாயவிலைக் கடை திறந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருள்களான பருப்பு மற்றும் பாமாயில் ஆகியன நியாய விலைக் கடைகளுக்கு முழுமையாக ஒதுக்கீடு செய்வதை உறுதி செய்ய வேண்டும். இதையும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Civil Supplies and Consumer Protection Departmentfair price shopsTN Govt
Advertisement
Next Article