Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#FactCheck | துப்பாக்கியுடன் தேவேந்திர ஃபட்னாவிஸின் போஸ்டர் - பாபா சித்திக் கொலையுடன் தொடர்புபடுத்தும் பதிவுகள் : உண்மை என்ன ?

02:14 PM Nov 14, 2024 IST | Web Editor
Advertisement

This news Fact Checked by The Quint

Advertisement

மகாராஷ்டிர துணை முதல்வர்  தேவேந்திர ஃபட்னாவிஸ் துப்பாக்கியை கையில் வைத்திருக்கும் பேனர் ஒன்று 'பழிவாங்குதல் நிறைவடைந்தது’ என்ற வாசகத்துடன் இடம்பெற்றதாக சமூக வலைதளங்களில் ஒரு பதிவு பகிரப்பட்டது. இது சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட பாபா சித்தீக் கொலைக்காக வைக்கப்பட்டுள்ளது எனவும் பரப்பப்பட்டது. இதுகுறித்து உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.

மகாராஷ்டிராவில் வருகிற நவம்பர் 20ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பாஜக – ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா – அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒன்றிணைந்து மகாயுதி எனும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. மறுபுறம் எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே அணி சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசின் ஒன்றிணைந்து மகா விகாஸ் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன.

மகராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் கடந்த மாதம் அக்டோபர் 12 ஆம் தேதி பாந்த்ராவில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ( என்சிபி ) தலைவர் 
பாபா சித்திக் , லாரன்ஸ் பிஷ்னோயுடன் தொடர்புடைய மூவரால் சுட்டுக் கொல்லப்பட்டடார். இந்த கொலைச் சம்பவம் மகாராஷ்டிர மாநில அரசியல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த கொலைச் சம்பவமானது, நடைபெற உள்ள அம்மாநில தேர்தல் பிரசாரத்தில் எதிரொலித்துள்ளன.

இந்த நிலையில் பாபா சித்திக்கீன் கொலைச் சம்பத்திற்கு அடுத்த நாள் மும்பை முழுவதும் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் துப்பாக்கிய ஏந்திய போஸ்டர்கள், பேனர்கள் ஒட்டப்பட்டு அதில் “பழிவாங்குதல் நிறைவடைந்தது” என எழுதப்பட்டிருந்ததாக சமூக வலைதளங்கள் பதிவுகள் வைரலானது. இதுகுறித்த உண்மைத் தன்மையை அறிய தி குயிண்ட் செய்தி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது.

உண்மை சரிபார்ப்பு :

சமூக வலைதளங்களில் பரவிய போஸ்டடரில் இடம்பெற்ற வாசகங்களின் முக்கிய வார்த்தைகளைத் தேடியபோது அவை செப்டம்பர் 26 அன்று ஹிந்துஸ்தான் டைம்ஸின் கட்டுரைக்கு அழைத்துச் சென்றது. அக்கட்டுரையில் சமூக வலைதளங்களில் பரவிய படங்கள் இடம்பெற்றிருந்தது. இதன் மூலம் இந்த போஸ்டர் அக்டோபரில் நடந்த சித்திக் கொலைக்கு முந்தைய ஒன்று என தெரிய வந்தது.

அதன்படி இந்த போஸ்ட்ரானது பத்லாபூர் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அக்ஷய் ஷிண்டே என்கவுண்டரைத் தொடர்ந்து, மும்பை முழுவதும் ஃபட்னாவிஸின் சுவரொட்டிகளை " சிலர் வைத்துள்ளனர். “ பட்லா புரா " (பழிவாங்குதல்) என்ற வாசகங்களைக் அதில் இடம்பெற்றிருந்தது. இந்த போஸ்டர் பாஜக ஆதரவாளரக்ளால் ஒட்டப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் 25 செப்டம்பர் அன்று வெளியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் 
செய்தியின்படி பாஜக செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில், “பாஜக எந்த போஸ்டர்களையும் ஒட்டவில்லை. எங்களின் நிலைப்பாட்டை முதல் நாளிலேயே தேவேந்திர ஃபட்னாவிஸே ஏற்றுக்கொண்டார். பாஜகவாகிய நாங்கள் சட்டத்தின் ஆட்சியை உண்மையாக நம்புகிறோம், அதைப் பின்பற்றுகிறோம். இந்த சுவரொட்டிகளை யார் ஒட்டினார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை” என்றார்.

முடிவு :

மகாராஷ்டிர துணை முதல்வர்  தேவேந்திர ஃபட்னாவிஸ் துப்பாக்கியை கையில் வைத்திருக்கும் பேனர் தற்போதையது அல்ல எனவும் அது இரண்டு மாதங்களுக்கு முந்தையது எனவும் நிரூபணமாகியுள்ளது.

Note : This story was originally published by The Quint and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Baba Siddiquedevendra fadnavisElectionfake newsMaharastra Election
Advertisement
Next Article