Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக எழிலரசன் நியமனம்!

திமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக எழிலரசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
12:55 PM Mar 12, 2025 IST | Web Editor
Advertisement

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளராக எழிலரசனை நியமித்து கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக சட்டப்பேரவை உறுப்பினரான எழிலரசன், மாணவர் அணிச் செயலாளராக பதவி வகித்து வந்த நிலையில், அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், திமுக மாணவர் அணித் தலைவராக இருந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை அப்பொறுப்பில் இருந்து விலக்கி, மாணவர் அணிச் செயலாளராக துரைமுருகன் நியமித்துள்ளார்.

Advertisement

இதையும் படியுங்கள் : திருச்செந்தூரில் மாசித் திருவிழா தேரோட்டம் கோலாகலம் – ‘அரோகரா’ கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்!

திமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டது குறித்து எழிலரசன் எக்ஸ் தளத்தில் கூறியதாவது,

"மாணவர்களுடன் உறவாடிக் கொண்டிருந்த எனக்கு, மக்களிடம் உரையாற்றுகிற வாய்ப்பினை, திமுக தலைவரின் குரலாய், இளந்தலைவரின் எண்ணத்தை ஒலிக்கின்ற வகையில் கொள்கை பரப்புச் செயலாளர் எனும் உன்னத பொறுப்பினை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், என்றென்றும் வழிகாட்டியாய் விளங்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நெஞ்சார்ந்த நன்றி!"

இவ்வாறு திமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட எழிலரசன் தெரிவித்தார்.

Advertisement
Next Article