Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

09:37 AM May 26, 2024 IST | Web Editor
Advertisement

தாம்பரம் - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் வாரந்திர சிறப்பு ரயில் ஜூன் மாதம் முழுவதும் நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisement

இது தொடர்பாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளதாவது,

"பயணிகளின் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு அதிவிரைவு ரயில் (எண்: 06012) ஜூன் 2-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து வாரந்தோறும் திங்கள்கிழமை நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு அதிவிரைவு ரயில் ( எண்: 06011) ஜூன் 3-ம் தேதி முதல் ஜூலை 1-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

அதேபோல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வாரந்தோறும் புதன்கிழமை கேரள மாநிலம் கொச்சுவேலிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (எண்: 06043) ஜூன் 5 முதல் ஜூலை 3-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.  மறுமார்க்கமாக கொச்சுவேலியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வாரந்தோறும் வியாழக்கிழமை இயக்கப்படும் வாரந்திர சிறப்பு அதிவிரைவு ரயில் (எண்: 06044) ஜூன் 6 முதல் ஜூலை 4-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது"

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Nagercoilspecial trainTambaram
Advertisement
Next Article