Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - ஒருவர் உயிரிழப்பு!

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். நான்கு அறைகள் தரைமட்டமாகின.
03:03 PM Feb 05, 2025 IST | Web Editor
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். நான்கு அறைகள் தரைமட்டமாகின.
கோப்புப் படம்
Advertisement

விருதுநகர் மாவட்டம் கன்னிசேரி புதூர் பகுதியில் இயங்கி வரும் சத்தியபிரபா என்ற தனியார் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் நான்கு அறைகள் வெடித்து தரைமட்டமாகின. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Advertisement

சிலர் இடுபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், போலீசார், வருவாய்துறை அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து வெடிகள் வெடித்துக்கொண்டு இருப்பதால் தீயணைப்பு வீரர்கள் நெருங்க முடியாத சூழல் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags :
|cracker factoryexplosionVirudhunagar
Advertisement
Next Article