சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - இரண்டு பேர் உயிரிழப்பு!
சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
12:32 PM Apr 26, 2025 IST
|
Web Editor
Advertisement
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே M.புதுப்பட்டியில் தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. அந்த ஆலைக்கு வழக்கம் போல் தொழிலாளர்கள் வேளைக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை பாட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.
Advertisement
இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.
மேலும் பட்டாசு ஆலைக்குள் பலர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Article