காலாவதியான டிஸ்னியின் காப்புரிமை: பொது பயன்பாட்டிற்கு வந்த மிக்கி மவுஸ்!
பிரபல கார்ட்டூன் கதாபாத்திரமான, 'மிக்கி மவுஸ்' சம்பந்தமான, 'டிஸ்னி' நிறுவனத்தின் 95 ஆண்டு கால காப்புரிமை காலாவதியாகிவிட்டது. இதனால் தற்போது மிக்கி மவுஸ் கதாபாத்திரத்தின் பொது பயன்பாட்டுக்கான தடை நீங்கியுள்ளது.
1928-ம் ஆண்டு, 'ஸ்டீம்போட் வில்லி' என்னும் அனிமேஷன் குறும்படத்தின் வாயிலாக அறிமுகமானது தான் மிக்கி மவுஸ் கதாபாத்திரம். 'டிஸ்னி' நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மிக்கி மவுஸ், ஆஸ்கர் விருது உட்பட, பல விருதுகளையும் வென்றுள்ளது. 'மிக்கி மவுஸ்'தான் முதன் முதலில் ஆஸ்கர் விருது வென்ற ஓர் உயிரற்ற கதாபாத்திரம்.
பெரும்பாலான மக்கள் விரும்பும் இந்த மிக்கி மவுஸை அனுமதியின்றிப் பயன்படுத்தக்கூடாது என்று அதன் காப்புரிமையை வைத்திருந்த 'டிஸ்னி' கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஆனால் 'மிக்கி மவுஸ்' சம்பந்தமான, 'டிஸ்னி' நிறுவனத்தின் 95 ஆண்டுக் கால காப்புரிமை காலாவதியாகிவிட்டது.
இதையும் படியுங்கள்: காளையை அவிழ்க்கும் போது உரிமையாளர் பெயரோடு சாதியின் பெயரை கூற தடை – உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
இதனால் 'மிக்கி மவுஸ்' கதாபாத்திரத்தின் பொதுப் பயன்பாட்டுக்கான தடை நீங்கியிருக்கிறது. அமெரிக்க சட்டத்தின் படி, 95 ஆண்டுகள் வரை தான் காப்புரிமைகள் செல்லுபடியாகும். அதன் அடிப்படையில், மிக்கி மவுஸின் கதாபாத்திரத்துக்கான டிஸ்னியின் காப்புரிமை முடிந்துவிட்டது.
இந்த மாதம் முதல், 'மிக்கி மவுஸ்' கதாபாத்திரத்தின் பொதுப் பயன்பாட்டுக்கு எந்த ஒரு தடையும் கிடையாது. இதற்கு டிஸ்னி நிறுவனம் உரிமை கோர முடியாது என்பது
குறிப்பிடத்தக்கது.