Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாளை முதல் #GameChanger படத்தின் Updateஐ எதிர்பார்க்கலாம் - இசையமைப்பாளர் #Thaman

06:08 PM Sep 24, 2024 IST | Web Editor
Advertisement

நாளை முதல் கேம் சேஞ்சர் படத்தின் அப்டேட்டை எதிர்பார்க்கலாம் என இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு ராம்சரண், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அரசியல் அதிரடி திரில்லர் திரைப்படமாக இது உருவாகியுள்ளது. இயக்குநர் ஷங்கர் தெலுங்கு மொழியில் இயக்கும் முதல் திரைப்படம் இதுவாகும். ஷங்கருடன் இணைந்து இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார்.

இதில், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, நாசர் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சில மாதங்களுக்கு முன் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் “ஜரகண்டி” என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. இப்பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் ராம் சரணுக்கான படப்பிடிப்பு முடிந்துள்ளது.  இதனைத் தெரிவிக்கும் விதமாக, முதல்நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படத்தையும் இறுதிநாளின் புகைப்படத்தையும் ராம் சரண் பகிர்ந்திருந்தார்.  இந்த நிலையில், ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளதை இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, தெரிவித்துள்ளார்.  இப்படத்தை கிறிஸ்துமஸ் வெளியீடாக திரைக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளரான தமன் `கேம் சேஞ்சர்' படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, கேம் சேஞ்சர் படத்தின் புதிய அப்டேட்டுகள் நாளை முதல் வெளியாகும் என்று தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் நாளை முதல் அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்பார்க்கலாம்.

Tags :
Game ChangerKiara AdvaniKiare AdvaniRam charanupdate
Advertisement
Next Article