வெளியானது Exit Poll முடிவுகள்... மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்கும் பாஜக?
மகாராஷ்டிரா மாநிலத்திற்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவாகிய வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்தத் தேர்தலில் ஆளும் கூட்டணி அரசான பாஜக - சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியாக களமிறங்கியுள்ளது. அதேபோல் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி சேர்ந்து களமிறங்கியுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்த நிலையில், 58.22% வாக்குகள் பதிவாகி உள்ளன.
கடந்த சில தேர்தல்களாக தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அவ்வளவு துல்லியமாக இல்லாமலும், சில சமயங்களில் கருத்துக் கணிப்புக்கு மாறான முடிவுகளும் வெளியாகிவருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன. மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பெரும்பான்மையாக 145 இடங்கள் தேவை.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்;
P-Marq - கருத்துக்கணிப்புகள்
பாஜக கூட்டணி - 137 -157
காங்கிரஸ் கூட்டணி - 126 -146
மற்ற கட்சிகள் - 2-8 இடங்களில் வெல்லும் என கூறப்பட்டுள்ளது.
POLL OF POLLS - கருத்துக்கணிப்புகள்
பாஜக - 154
காங்கிரஸ் - 128
பிற கட்சிகள் - 6.
Republic - கருத்துக்கணிப்புகள்
பாஜக - 137 - 157
காங்கிரஸ் - 126 - 146
பிற கட்சிகள் - 2-8.