Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#NTK | கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிர்வாகி மீது தாக்குதல் - நாதகவில் தொடரும் சலசலப்பு!

09:41 PM Nov 07, 2024 IST | Web Editor
Advertisement

கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளரை, நாம் தமிழர் கட்சியினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து நாம் தமிழர் கட்சியின் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்து வரும் நிலையில், தேவேந்திரன் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் 10க்கும் மேற்பட்டோர், கட்சியில் இருந்து விலகுவதாக வாணியம்பாடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர், நாம் தமிழர் கட்சியில் நம்பிக்கை தன்மை இழந்து விட்டதாகவும், யாரிடம் கூட்டு வைக்கவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் தமிழ் தேசியத்தை ஏற்றுக்கொண்டு பயணிக்கவில்லை, படித்தவர்களை வேட்பாளராக முன் நிறுத்திய போது, அதை சீமான் மறுத்ததால் கட்சியில் இருந்து விலகுவதாக கூறினார்.

அப்போது அங்குவந்த நாம் தமிழர் கட்சியினர் சீமானை பற்றி பேசக்கூடாது என தேவேந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாம் தமிழர் கட்சி வாணியம்பாடி தொகுதி குருதி பாசறை பொறுப்பாளர் நாகராஜ் என்பவர், தேவேந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இரு தரப்பினருக்கும் இடையே மோதலாக மாறியது. சரமாரியாக தாக்கி கொண்டு, அங்கிருந்த நாற்காலிகளை எடுத்து மாவட்டச் செயலாளர் தேவேந்திரன் மீது தாக்குவதற்காக, நாகராஜ் பாய்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி நகர காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். நாம் தமிழர் கட்சியினரிடையே கடும் மோதல் ஏற்பட்ட நிகழ்வு கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
நாதகNTKpress conferenceSeemantirupathur
Advertisement
Next Article