Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"இங்க ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஸ்டைஸ் இருக்கு" - கவனம் ஈர்க்கும் DNA படத்தின் டீசர்!

02:59 PM Jan 10, 2025 IST | Web Editor
Advertisement

அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள ‘டிஎன்ஏ’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

Advertisement

‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா முரளி. இவர் பரதேசி, இமைக்கா நொடிகள், சண்டி வீரன், ஈட்டி போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி ரசிகர்களை வைத்துள்ளார்.

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸாக இவரது நடிப்பில் ‘மத்தகம்’ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதர்வா தற்போது ‘ஒத்தைக்கு ஒத்த’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். அதே சமயம் இவர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்கும் கமிட்டாகி இருக்கிறார். இதற்கிடையில் அதர்வா ‘டிஎன்ஏ’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் அதர்வா இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இதில் அதர்வாவுக்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடிக்கிறார். இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்குகிறார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல் வெளியாகி கவனம் பெற்றது. ‘டிஎன்ஏ’ படம் ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு, டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

 

Advertisement
Next Article