இறப்பே நேர்ந்தாலும் அது காதலுக்கு முடிவாகாது! இறந்த காதலனை திருமணம் செய்த காதலி!
இறப்பே நேர்ந்தாலும் அது காதலுக்கு முடிவாகாது என மெய்பிக்கும் விதமாக விபத்தில் இறந்த காதலனை தைவானை சேர்ந்த பெண் திருமணம் செய்திருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.
தைவான் நெடுஞ்சாலையில் கடந்த 15-ஆம் தேதி நடந்த விபத்தில் யூ என்கிற குடும்ப பெயரை கொண்ட பெண்ணும் அவரது காதலரும் விபத்துக்கு உள்ளாகினர். அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதிய இந்த விபத்தில் யூ-வின் காதலன் உயிரிழந்தார். காயங்களுடன் தப்பிய யூ தனது காதலனை காக்க முயன்றும் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது காதலனை கௌரவிக்கும் விதமாகவும், அவரது வயதான தாயை கவனித்துக்கொள்வதற்காகவும் யூ ஒரு முக்கிய முடிவை எடுத்தார். அதன்படி யூ தனது இறந்த காதலனை திருமணம் செய்துகொண்டார்.
தைவானும் சீனாவும் பாரம்பரிய ரீதியாக ஒத்த பண்புகளை கொண்டவை. இந்நிலையில், சீனாவில் இறந்தவர்களை திருமணம் செய்துகொள்வது 3000-ஆண்களாகவே வழக்கத்தில் உள்ள பாரம்பரிய நடைமுறையே எனக் கூறப்படுகிறது. திருமணம் நடக்காமல் உயிரிழப்பவர்கள் அவர்களின் இறப்புக்கு பிந்தைய வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க முடியாது என நம்பப்படுவதால் இத்தகைய நடைமுறை இருந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய திருமணங்களில் ஆணோ, பெண்ணோ ஒருவர் உயிரோடு இருக்க இறந்தவரின் புகைப்படம் அவர்கள் அணிந்திருந்த உடைகள் மற்றும் பிற கலைப்பொருள்களை கொண்டு பாரம்பரிய திருமண சடங்குகள் நடத்தப்படுகின்றன.
சீனாவில் நிச்சயம் செய்யப்பட்ட மணப்பெண்ணும், மாப்பிள்ளையும் இறக்கும் போது அவர்களுக்கு திருமணம் செய்துவைத்து ஒன்றாக அடக்கம் செய்யும் நடைமுறையும் வழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.