Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இ.வி.கணேஷ்பாபுவின் ‘ஆசான்’ குறும்படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு!

05:13 PM Nov 19, 2024 IST | Web Editor
Advertisement

இ.வி.கணேஷ்பாபு நடித்திருக்கும் ஆசான் குறும்படம், கோவாவில் நடைபெற இருக்கும் 55 -ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மற்றும் தேசிய திரைப்பட மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 55-வது சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் வருகிற 20-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த பல நடிகை, நடிகர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த விழாவில் தமிழ்நாட்டில் இருந்து 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் திரையிடத் தேர்வாகி உள்ளது. தமிழில் தேர்வாகி உள்ள Feature Film இதுதான். இந்நிலையில் இவ்விழாவில் திரையிட Non - Feature Film பிரிவில் தமிழ் குறும்படமான ‘ஆசான்’ படமும் தேர்வாகி உள்ளது.

நடிகர், கவிஞர், எழுத்தாளர், இயக்குநர் என பன்முகத் திறன் கொண்ட இ.வி.கணேஷ்பாபுவின் எழுத்து, இயக்கம் நடிப்பில் உருவாகி உள்ள குறும்படம் ‘ஆசான்’. ஸ்ரீ மலைமேல் அய்யனார் மூவிஸ் சார்பில் G.வனிதா இந்த குறும்படத்தை தயாரித்துள்ளார்.

கணேஷ்பாபுவின் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த்தேவா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். என்.கே.ராஜராஜனின் ஒளிப்பதிவில், சுராஜ்கவி படத்தொகுப்பில், UKI.ஐயப்பன் ஒலிக்கலவையில், நந்தினி கார்க்கியின் சப்டைட்டிலிங் பணியில் இப்படம் உருவாகி இருக்கிறது. இ.வி.கணேஷ்பாபு நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் ராமன் அப்துல்லா, தஞ்சை அமலன், ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தைப் பற்றி இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது:

உலகம் முழுவதிலிருந்தும் பல திரைப்பட ஆளுமைகள் இந்த திரைப்பட விழாவிற்கு வருகை தருகிறார்கள். அவர்களது திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்படுகிறது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச திரைப்பட விழாவில் எனது படமும், பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வரும் நவ.23 அன்று பகல் 12.15 க்கு கோவா panjim ல் Inox திரையரங்கில் ஆசான் திரையிடப்படுகிறது.

சிறுவயதில் மாணவர்கள் செய்யும் குற்றத்திற்கு அவர்களை தண்டிப்பதை விட, அந்தத் தவறை உணரச் செய்வதின் மூலம், அவர்கள் வாழ்வை ஒரு ஆசிரியரால் உயர்த்த முடியும் என்ற
கதைக்கருவை மையமாகக் கொண்டு ஆசான் உருவாக்கப்பட்டு இருக்கிறது” என்று கூறினார்.

Tags :
55 IFFIஆசான்AasaanEV GaneshbabuIFFI 2024International Film Festival of Indiashort film
Advertisement
Next Article