ஐரோப்பிய யூனியன் தேர்தல் | ரஷ்யா தலையீடு... நாடாளுமன்றத்தில் சோதனை!
வரும் ஜூன் மாதத்தில் நடைபெற இருக்கும் ஐரோப்பிய யூனியன் தோ்தலில் ரஷ்யா தலையிடும் என அஞ்சப்படுவதால், நாடாளுமன்ற வளாகத்திலும், பிற இடங்களிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனா்.
உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் 3வது ஆண்டை நெருங்கியுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தனது தாக்குதல்களை நடத்தியது. ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனில் உயிர் மற்றும் உடைமை இழப்புகள் தொடர்ந்து அதிகரித்தன. ஆரம்பத்தில் புதினின் படைகள் ஆக்ரோஷமாக இருந்தன.
பின்னர் ஜெலன்ஸ்கியின் ராணுவமும் மேற்கத்திய ஆயுதங்களின் உதவியுடன் எதிர் தாக்குதல்களை நடத்தி ரஷ்யாவை அதிர வைத்தது. பின்னர் ஜெலன்ஸ்கியின் ராணுவமும் மேற்கத்திய ஆயுதங்களின் உதவியுடன் எதிர் தாக்குதல்களை நடத்தி ரஷ்யாவை அதிர வைத்தது. இதனிடையே, ரஷ்ய ராணுவத்தால் இந்த மாதத் தொடக்கத்தில் கைப்பற்றப்பட்ட தங்கள் நாட்டின் கார்கிவ் பிராந்தியப் பகுதிகளை மீட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடுமீர் ஜெலன்ஸ்கி சமீபத்தில் கூறியிருந்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “கார்கிவ் பிராந்தியத்தின் சில எல்லைப் பகுதிகள் நமது படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதற்கு முன்னர் அந்தப் பகுதிகளுக்குள் ஆக்கிரமிப்புப் படையினர் நுழைந்திருந்தனர்” என தெரிவித்தார். இந்த நிலையில், உக்ரைனுக்கான ஆதரவைக் குறைக்கும் நோக்கில், அடுத்த மாதம் நடைபெறும் ஐரோப்பிய யூனியன் தோ்தலில் ரஷ்யா தலையிடும் என அஞ்சப்படுகிறது.
இதன் காரணமாக நாடாளுமன்ற வளாகத்திலும், பிற இடங்களிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனா். இது குறித்து பெல்ஜியம் அதிகாரிகள் கூறுகையில், "ரஷியாவுக்கு ஆதரவாக நாடாளுமன்ற பணியாளா் ஒருவா் செயல்படுவதாக சந்தேகிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது இல்லத்திலும், ஸ்டால்டன்பா்க் நகரிலுள்ள அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. நாடாளுமன்ற வளாகமும் சோதிக்கப்பட்டது" என்றனா்.