Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

யூரோ சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து!

07:24 AM Jul 11, 2024 IST | Web Editor
Advertisement

யூரோ காற்பந்துப் போட்டியின் இறுதிச் போட்டிக்கு இங்கிலாந்து முன்னேறியுள்ளது.

Advertisement

17வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இத்தொடரில் நேற்று இரவு நடந்த அரையிறுதியில் நெதர்லாந்து, இங்கிலாந்து மோதின. ஆட்டம் தொடங்கிய 7வது நிமிடத்திலேயே நெதர்லாந்து வீரர் சிமன்ஸ் கோல் அடித்து அசத்தினார். இதையடுத்து, ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஹரி கேன் கோல் அடித்தார்.

இதனால், ஆட்டத்தின் முதல் பாதியில் 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 90வது நிமிடத்தில் இங்கிலாந்து வீடர் ஓலி வெட்கின்ஸ் கோல் அடித்தார். இதன் மூலம் 2-1 என்ற ஒன்ற கோல் கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றது. இதையடுத்து ஆட்டத்தின் இறுதிவரை கோல் அடிக்க நெதர்லாந்து வீரர்கள் முயற்சித்தனர். ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன.

இதையடுத்து, ஆட்டத்தில் இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்குள் இங்கிலாந்து நுழைந்தது. முன்னதாக ஏற்கனவே இறுதிப்போட்டிக்குள் ஸ்பெயின் நுழைந்துள்ளது. இதையடுத்து ஸ்பெயின், இங்கிலாந்து ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
ENGLANDEuro 2024Eurocopa 2024FinalsNederlandsemi finalsSpainUEFA 2024
Advertisement
Next Article