Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Ethiopia | ஆற்றில் லாரி கவிழ்ந்த விபத்தில் 71 பேர் உயிரிழப்பு!

09:50 PM Dec 30, 2024 IST | Web Editor
Advertisement

எத்தியோப்பியா ஆற்றில் லாரி கவிழ்ந்த விபத்தில் 71 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பொதுவாக கிராமப்பபுரங்களில் திருமணங்கள் போன்ற சமூக நிகழ்வுகளுக்கு செல்வதற்கு பேருந்து அல்லது வேனை வாடகைக்கு எடுப்பது வழக்கம். அதிகமானோர் செல்வதால் இவ்வாறு பேருந்து அல்லது வேனில் பயணம் செய்வர். ஆனால், எத்தியோப்பியா நாட்டின் சமூக நிகழ்வுகளுக்கு பேருந்துகளை வாடகைக்கு எடுப்பதற்குப் பதிலாக லாரிகளை வாடகைக்கு எடுப்பதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

லாரி மலிவு விலையில் கிடைப்பதாலும், பலரை ஏற்றிச் செல்ல முடிவதாலும் மக்கள் இவ்வாறு பயணம் செய்வதாக கூறப்படுகிறது. அந்த வகையில், தெற்கு எத்தியோப்பியாவின் சிடாமா பகுதியில் திருமண நிகழ்வுக்காக லாரி ஒன்றில் 70க்கும் மேற்பட்டோர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஆற்றுப்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, எதிர்பாராதவிதமாக ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் பேருந்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். துருதிஷ்டவசமாக இந்த விபத்தில் 64 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Next Article