Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஈரோடு இடைத்தேர்தல் - தபால் வாக்குப்பதிவு தொடங்கியது!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
10:32 AM Jan 23, 2025 IST | Web Editor
Advertisement

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது.

Advertisement

தி.மு.க. வேட்பாளர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 46 பேர் களத்தில் உள்ளனர். தேர்தலை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 209 முதியோர் மற்றும் 47 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 256 பேர் தபால் வாக்களிக்கின்றனர்.

வாக்கு சாவடி அலுவலர்கள் அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று தபால் வாக்குகளை பதிவு செய்கின்றனர். காலை 8 மணி முதல் மாலை 5 மணி தபால் வாக்கு பெறப்படுகிறது. தபால் வாக்குகளை பெற 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்புடன் தபால் வாக்குகளை பெறும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் வருகின்ற 27-ந் தேதி வரை தபால் வாக்குகள் பதிவு செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
by electionDMKElection commissionErodepostalVOTING
Advertisement
Next Article