Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்ட பென்னிகுக் சிலை இருக்கும் இங்கிலாந்தின் சர்ரே ஹீத் தொகுதி - லிபரல் டெமாக்கிரட்ஸ் சார்பாக அல் பிங்க்கர்டன் வெற்றி!

03:32 PM Jul 05, 2024 IST | Web Editor
Advertisement

தமிழக அரசால் நிறுவப்பட்ட பென்னிகுக் சிலை இருக்கும் கேம்பர்லீ நகரின், சர்ரே ஹீத் தொகுதியில் லிபரல் டெமாக்கிரட்ஸ் சார்பாக போட்டியிட்ட அல் பிங்க்கர்டன் வெற்றி பெற்றுள்ளார். இவர் இங்கிலாந்து - தமிழ்நாடு உறவை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

Advertisement

பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனக் கடந்த 2022-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வருகிறார். இவரது பதவி காலம் 2025 ஜனவரியில் நிறைவடைகிறது. இதனால் நேற்று பிரிட்டனில் ஒரேகட்டமாக அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சியும், தொழிலாளர் கட்சியும் நேருக்கு நேர் மோதின. நேற்று (ஜூலை 4) காலை தொடங்கிய தேர்தல் இரவு 7 மணிக்கு சுமூகமாக முடிந்தது. இந்தியா போல் இல்லாமல் பிரிட்டனில் வாக்குச்சீட்டு முறையே நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் இன்று (ஜூலை 5) காலை முதல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியை சந்திக்கும் என தெரிவித்திருந்தது. கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறும் எனவும் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 650 தொகுதிகளில் 410தொகுதிகளில் வெற்றிப் பெற்று தனிப்பெரும்பான்மையோடு தொழிலாளர் கட்சி ஆட்சியமைக்கும் எனவும் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்தன.

கன்சர்வேட்டிவ் கட்சி 131 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் எனவும் அம்முடிவுகள் தெரிவித்தன. இந்நிலையில் இன்று (ஜூலை 5) காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதன்படி ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி வெறும் 30 க்கும் மேற்பட்ட இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

ஆட்சி அமைக்க 326 இடங்கள் தேவை. கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி 380க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம்  15 ஆண்டுகளுக்கு பிறகு தொழிலாளர் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

இந்நிலையில், கர்னல் ஜான் பென்னிகுக்கின் சொந்த ஊரும், தமிழக அரசால் நிறுவப்பட்ட கர்னல் ஜான் பென்னிகுக் சிலை இருக்கும் கேம்பர்லீ எனும் நகரத்தின் நாடாளுமன்ற தொகுதியான சர்ரே ஹீத்-தில் (Surrey Heath) லிபரல் டெமாக்கிரட்ஸ் சார்பாக அல் பிங்க்கர்டன் (Al Pinkerton) போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இவர் பென்னிகுக் சிலை முன் நின்று தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கும் பென்னிகுக் சிலையை நிறுவியதற்காக நன்றி தெரிவித்ததுடன், இங்கிலாந்து - தமிழ்நாடு இடையேயான உறவை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Al PinkertoncandidateCMO TamilNaduENGLANDMK StalinmpNews7Tamilnews7TamilUpdatesTN Govt
Advertisement
Next Article