Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஓய்வை அறிவித்தார் இங்கிலாந்து வீரர் #DawidMalan!

03:35 PM Aug 28, 2024 IST | Web Editor
Advertisement

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் அறிவித்துள்ளார்.

Advertisement

டேவிட் மலான் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஆவர். 36 வயதாகும் இவர் இங்கிலாந்து அணிக்காக இதுவரை 22 டெஸ்ட், 30 ஒருநாள் மற்றும் 62 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த 2020ம் ஆண்டில் டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் 1 வீரராக இவர் தேர்வு செய்யப்பட்டார். மேலும், அதிவேகமாக 1,000 ரன்களை (24 போட்டிகள்) கடந்த வீரர் என்ற சாதனையையும் டேவிட் மலான் படைத்துள்ளார்.

கடந்த 2022ல் டி20 உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்து அணியிலும் முக்கிய பேட்ஸ்மேனாக மலான் இடம்பெற்றிருந்தார். ஐபில் தொடரை பொறுத்தவரை கடந்த 2021ல் ஒரேயொரு போட்டியில் மட்டும் இவர் ஆடியுள்ளார்.

இந்த சூழலில் கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைக்கு பிறகு டேவிட் மலான் இங்கிலாந்து அணிக்காக எந்த போட்டியிலும் விளையாடாமல் இருந்தார். இந்த நிலையில், மூன்று விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவதாக டேவிட் மலான் அறிவித்துள்ளார்.

Tags :
#SportsCricketDawid MalanENGLANDRetirement
Advertisement
Next Article