Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!

10:51 AM Jan 19, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையின் 10-க்கும் மேற்பட்ட  இடங்களில் அமலாக்கத் துறையினர் மற்றும் வருமான துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

Advertisement

தமிழ்நாட்டில் பல மாதங்களாகவே பல நிறுவனங்களில் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றன.  அந்த வகையில், சென்னை அசோக் நகர் 47வது தெருவில் உள்ள Ocean Lifespaces India என்ற நிறுவனத்தின் சிஇஓ எஸ்.கே பீட்டர் என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையின் ஒருபக்கம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், அமலாக்கத் துறையும் சோதனையை மேற்கொண்டு வருகிறது. சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக இந்த விசாரணை மேற்கொள்ளபட்டு வருகிறது.

வருமான வரித்துறை சோதனை : 

சென்னை யானைக்கவுனி,  கீழ்பாக்கம்,  கே.கே.நகர் உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் யானைக்கவுனியில் பஜ்ஜிலால் என்பவருக்கு சொந்தமான கெமிக்கல் கம்பெனியில் சோதனை நடைபெற்று வருகிறது.

Tags :
ChennaiEnforcement Departmentincome tax departmentNews7Tamilnews7TamilUpdatesRaid
Advertisement
Next Article