ஜாபர் சாதிக் வழக்கில் #DirectorAmeer உட்பட 12பேர் மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை..!
ஜாபர் சாதிக் மீதான அமலாக்கத்துறை வழக்கில் இயக்குனர் அமீர் உள்ளிட்ட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் போதை பொருள் வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட நிலையில் ரூபாய் 2000 கோடிக்கு அதிகமாக வெளிநாடுகளுக்கு போதை பொருட்களை கடத்தியதன் மூலம் பணம் சேர்த்ததாக புகார் எழுந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். முன்னதாக தமிழகத்தை சேர்ந்த 3 பேரை போதை பொருள் வழக்கில் மத்திய போதை பொருள் தடுப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்தி விசாரணையில் தான் மூளையாக செயல்பட்டது ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது. அவர் ஒரு சினிமா தயாரிப்பாளர் மற்றும் திமுகவின் முக்கிய உறுப்பினர். இவர் போதை பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் திமுக அவரை கட்சியிலிருந்து நீக்கிய நிலையில் இந்த வழக்கில் இயக்குனர் அமீருக்கும் தொடர்பு இருப்பதாக கருதப்பட்டது.
ஆனால் இயக்குனர் அமீர் இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வந்த நிலையில் தற்போது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்ற பத்திரிக்கையில் ஜாபர் சாதிக், அவருடைய மனைவி அமீனா பானு, சகோதரர் முகமது சலீம் மற்றும் அவருடைய தயாரிப்பு நிறுவனம் போன்றவைகள் சேர்க்கப்பட்ட நிலையில் 12வது நபராக இயக்குனர் அமீர் சேர்க்கப்பட்டுள்ளார். இயக்குனர் அமீர் உட்பட 21 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்ற பத்திரிக்கையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை அனுமதி கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.