Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"எமர்ஜென்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிட்டது!" - மகிழ்ச்சியில் #KanganaRanaut!

08:41 PM Oct 17, 2024 IST | Web Editor
Advertisement

எமர்ஜென்சி திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துவிட்டதாக நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

Advertisement

திரைத்துறையில் இருந்து அரசியலுக்குள் நுழைந்து பாஜக எம்பியாக உள்ளவர் கங்கனா ரனாவத். மக்களவை தேர்தலில் இமாச்சல பிரதேச மாநிலம், மாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அரசியல் வருகைக்கு பின் இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படம் எமர்ஜென்சி. இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்திய 21 மாத அவசரநிலையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘எமர்ஜென்சி’.

இந்தப் படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இதன் டீசர் கடந்த ஆக.14ம் தேதி வெளியானது.  இந்தப் படத்தில் சீக்கியர்களை தவறாக சித்தரித்ததாக கூறி படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதன்காரணமாக கடந்த செப்.6ம் தேதி வெளியாக இருந்த இந்தப் படம் வெளியாகவில்லை.

இதனையடுத்து, இந்தப் படத்தின் துணை தயாரிப்பு நிறுவனமான ஜீ என்டர்டெயின்மென்ட் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் சென்சார் போர்டுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, எமர்ஜென்சி படத்திற்கு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக செப்டம்பர் 25ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என சென்சார் போர்டுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், எமர்ஜென்சி திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதல் வழங்கப்பட்டுள்ளதாக நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,

"எங்களது எமர்ஜென்சி படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துவிட்டது என்ற செய்தியினை மகிழ்ச்சியாக அறிவிக்கிறோம். ரிலீஸ் தேதி எப்போது என விரைவில் அறிவிக்கிறோம். ஆதரவுக்கும் பொறுமையாக காத்திருந்தமைக்கும் மிக்க நன்றி."

இவ்வாறு நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

Tags :
Censor certificatecinemaemergencyKangana RanautmovieMumbai High Courtnews7 tamil
Advertisement
Next Article