இஸ்ரேல் செல்கிறார் எலான் மஸ்க்!
அக். 7-ம் தேதி இஸ்ரேல் மீது காஸா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அதிகாரப்பூர்வமாக போர் அறிவித்து ஒரு மாதத்துக்கும் மேலாக காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. கடல், வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து தற்போது தரை வழியாக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், காஸாவின் மருத்துவமனைகள், மசூதிகள், முகாம்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. இப்போருக்கு பல நாடுகள் கண்டனங்கள் தெரிவித்த நிலையில், போரை நிறுத்த இரு நாடுகளும் ஒப்பு கொள்ளவில்லை. ஒட்டுமொத்தமாக, இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், எக்ஸ் நிறுவனத்தின் தலைவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் அடுத்த வாரம் இஸ்ரேலுக்கு செல்வதாக N12 செய்தி சேனலை மேற்கோள் காட்டி ஜெருசலேம் போஸ்ட் தெரிவித்துள்ளது. அப்போது அவர் அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸால் தாக்கப்பட்ட காசா எல்லைக்கு அருகிலுள்ள நகரங்களுக்குச் செல்வார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.