Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரூ.2.82 லட்சம் கோடிக்கு X தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்!

எலோன் மஸ்க் எக்ஸ் வலை தளத்தை தனது சொந்த நிறுவனமான எக்ஸ் ஏ.ஐ. (xAI) என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளதார்.
01:37 PM Mar 29, 2025 IST | Web Editor
featuredImage featuredImage
Advertisement

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த 2022ம் ஆண்டு ட்விட்டர் வலைத்தளத்தை $44 பில்லியனுக்கு வாங்கினார். அதன்பிறகு ட்விட்டர் தளத்தின் பெயரை எக்ஸ் என மாற்றி, ஏராளமான அப்டேட்டுகளையும் வழ்னக்கினார்.

Advertisement

மேலும் 2023ம் ஆண்டு xAI ஐ அறிமுகப்படுத்தினார். இதற்காக உயர்நிலை என்விடியா சிப்களை பயன்படுத்த பில்லியன் கணக்கான டாலர்களை எலான் மஸ்க் செலவிட்டார். அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் xAI அதன் சாட்போட்டின் சமீபத்திய எடிஷனான Grok 3 ஐ வெளியிட்டது. இது ChatGPT மற்றும் சீனாவின் DeepSeek போன்றவற்றால் மிகவும் போட்டி நிறைந்த துறையில் கவனத்தை ஈர்க்கும். அதன் விளைவாகவே தற்போது இரண்டு நிறுவனங்களையும் இணைப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், எலான் மஸ்க் தனது எக்ஸ் நிறுவனத்தை ரூ.2.82 லட்சம் கோடிக்கு விற்பனை செய்துள்ளார். மஸ்கின் சொந்த நிறுவனமான X AI நிறுவனத்துக்கு எக்ஸ் தளத்தை விற்பனை செய்துள்ளார். X AI நிறுவனம் செயற்கை நுண்ணறிவு துறையில் செயல்பட்டு வருகிறது. முன்னதாக எக்ஸ் தளத்தில் X AI நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சாட்பாட் தொழில்நுட்பமான 'க்ரோக் 3' ஏஐ (Grok 3 AI) அறிமுகப்படுத்தப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த நிறுவன மாற்றத்திற்கு பின் இரு நிறுவனங்களின், தரவு, மாதிரிகள், கணினி, விநியோகம் ஊழியர்களும் இணைக்கப்பட்டு இணைந்து பணியாற்ற உள்ளதாக அறிவித்துள்ளார்.

Tags :
Announcementelon musksoldTwitterX platform
Advertisement