Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கிணற்றில் விழுந்த யானை... 20 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்பு!

மலப்புரத்தில் கிணற்றுக்குள் விழுந்த யானையை வனத்துறையினர் சுமார் 20 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.
09:35 PM Jan 24, 2025 IST | Web Editor
Advertisement

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள உறங்காத்திரி கிராமத்தில் கடந்த சில நாட்களாகவே, யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக அக்கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக ஓடக்காயம் வார்டு பகுதியில் அடிக்கடி யானைகள் வந்து செல்வதாக இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

அவை ஏக்கர் கணக்கில் பயிர்களை நாசம் செய்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இரவு நேரங்களில் வரும் யானைகள் ரப்பர், தென்னை, பாக்கு போன்ற பயிர்களை நாசம் செய்வதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, யானைகளை காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த சூழலில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கிராமத்திற்குள் வந்த யானைகளை மக்கள் விரட்டியத்தனர். அப்போது சன்னி என்பவரது தோட்டத்தில் உள்ள 25 அடி ஆழம் கொண்ட கிணற்றில் யானை ஒன்று தவறி விழுந்தது. உடனடியாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துனையில் யானையை மீட்கும் பணியின் ஈடுபட்டனர்.

வனத்துறையினர் ஜேசிபி உதவியுடன் கிணற்றின் பக்கவாட்டில் மண்ணை தோண்டி எடுத்து யானை மேலே வர வழி வகை செய்தனர். சுமார் 20 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, யானை கிணற்றில் பக்கவாட்டு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட வழியின் மூலம் வெளியே வந்தது. இதன் பின்னர் வெடி வெடித்து யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

Advertisement
Next Article