Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டில் புதிய உச்சம் தொட்ட மின் நுகர்வு!

01:17 PM May 01, 2024 IST | Web Editor
Advertisement

தமிழகத்தில் மின் நுகர்வு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை அடைந்ததுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டின் சராசரி மின் நுகர்வு 30 கோடி யூனிட்டாக உள்ளது.  தற்போது கோடை வெயில் வாட்டி வதைப்பதால் ஏசி உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரித்து,  மின்நுகர்வும் உயர்ந்து வருகிறது.  அந்த வகையில்,  தமிழ்நாட்டில் மின் நுகர்வு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை அடைந்ததுள்ளது.  அதன்படி,  நேற்று (ஏப்.30) 45.43 கோடி யூனிட் மின் நுகர்வு பதிவாகியுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.  இதுதான் தமிழ்நாட்டில் பதிவான மிக அதிக மின்சார நுகர்வு.

கோடைகாலம் என்பதால் மின்சார பயன்பாடு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.  அரசுக்கு சொந்தமான மின் பயன்பாட்டு நிறுவனம் இன்னும் கூடுதல் மின் தேவை வரும் நாட்களில் ஏற்படலாம் என்று கணித்துள்ளது.  ஏப்ரல் மாதத்தில் மின்சார தேவை 20,701 மெகாவாட்டாக உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் இருந்த மின் நுகர்வுடன் ஒப்பிடும்போது கோடை காலம் தொடங்கிய மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் அதிகப்படியான மின் நுகர்வு இருந்தது.

Tags :
ConsumeEDElectricitytamil nadu
Advertisement
Next Article