Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி... சேதமடைந்த மின்கம்பம் ஒரே நாளில் அகற்றம்!

நெல்லை அருகே ஆபத்தான நிலையில் இருந்த மின்கம்பம் நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியால் அகற்றப்பட்டது.
01:13 PM Mar 20, 2025 IST | Web Editor
நெல்லை அருகே ஆபத்தான நிலையில் இருந்த மின்கம்பம் நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியால் அகற்றப்பட்டது.
Advertisement

நெல்லை மாவட்டம் வள்ளியூர் புதிய பேருந்து நிலையத்திற்கு மேற்கு பகுதியில் அதிகளவு குடியிருப்பு பகுதிகள் உள்ளன. அந்த பகுதியில் சுகம் மருத்துவமனை வழியாக நான்கு வழிச்சாலை செல்லும் தெருவில், மேற்கு பகுதியில் மின்வாரியத்திற்கு சொந்தமான மின்கம்பம் ஒன்று அடிப்பகுதி சேதமடைந்து காணப்பட்து.

Advertisement

பொதுமக்கள் இந்த ஆபத்தான மின்கம்பத்தை கடந்து சென்று வந்தனர். இதனால் அசம்பாவிதம் ஏற்படும் சூழல் நிலவியது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதுதொடர்பாக செய்தி நமது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் நேற்று (மார்ச். 19) ஒளிபரப்பானது. இதனைத் தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் அந்த ஆபத்தான மின்கம்பத்தை அகற்றினர். இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags :
#valliyurEB PoleNews 7 Tamil Newsthirunelveli
Advertisement
Next Article