பீகாரில் நவம்பர் 22க்குள் தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையம் தகவல்..!
பிகார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஞானேஷ் குமார் பீகாரில் இரண்டு நாள் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிலையில் இன்று ஞானேஷ் குமார் பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
”எந்தவொரு வாக்குச்சாவடிக்கும் 1,200க்கும் அதிகமான வாக்காளர்கள் இருக்கக்கூடாது என்ற முடிவை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. பூத் அளவிலான அதிகாரிகளுக்கும் அடையாள அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
வாக்குச்சாவடிகளுக்கு வெளியே ஓர் அறையில் கைப்பேசிகளை பாதுகாப்பாக வைத்துச் செல்லவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் அனைத்தும் பிகார் முழுவதும் அமல்படுத்தப்படவுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 100% இணையவழியிலான ஒளிபரப்பு செய்யப்படும்.
பீகாரில் 243 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் 2 எஸ்.டிக்கும், 38 எஸ்.சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. பீகார் சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவம்பர் 22, 2025 அன்று முடிவடைகிறது. ஆகையால் அதற்கு முன்னர் தேர்தல்கள் நடத்தப்படும். SIR ஜூன் 24, 2025 அன்று தொடங்கப்பட்டு காலக்கெடுவிற்குள் நிறைவடைந்தது” என்று தெரிவித்தார்.