Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம்! தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு!

01:18 PM Mar 22, 2024 IST | Web Editor
Advertisement

நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

Advertisement

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது.  தேர்தலுக்கான தொகுதி பங்கீடு,  வேட்பாளர் அறிவிப்பு,  பிரச்சாரம் என தேர்தல் பணிகளில் கட்சிகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி மட்டும் சின்னம் தொடர்பான சிக்கலில் சிக்கியிருந்தது.

இந்நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.  கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொண்டதால் நாம் தமிழர் கட்சிக்கான சின்னம் பறிபோனது.

இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் வேறொரு சின்னத்தை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது.  இந்த நிலையில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் மைக் சின்னத்தை ஒதுக்கி உள்ளது.  இருப்பினும் நாம் தமிழர் கட்சி வேறு சின்னத்தை கேட்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  ஆட்டோ,  தீப்பட்டி,  படகு, கப்பல் உள்ளிட்ட சின்னங்களில் ஏதேனும் ஒன்றை நாதக கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Election commissionElection2024MikeNTKParlimentary ElectionSeeman
Advertisement
Next Article