Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மகாராஷ்டிராவின் கல்யாண் தொகுதியில் ஏக்நாத் ஷிண்டே மகன் போட்டி!

02:52 PM Apr 06, 2024 IST | Web Editor
Advertisement

மகாராஷ்டிராவின் கல்யாண் தொகுதியில் அந்த மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

Advertisement

இந்தியாவில் மாபெரும் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் மக்களவை தேர்தல்  நடைபெறவுள்ளது.  மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

48 எம்பிக்களைக் கொண்ட மகாராஷ்டிராவில்,  5 கட்டங்களாக வரும் 19-ம் தேதி முதல்,  மே 20-ந் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ந் தேதி நடைபெறவுள்ளது.  மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாஜக,  சுனில் தாட்கரே தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்,  ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிர்மான் சேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.

இதே போல், காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றன.

இந்த நிலையில்,  மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே  மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவின் கல்யாண் தொகுதியில் போட்டியிடுவார் என்று அந்த மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இன்று அறிவித்தார்.

மேலும்,  அவர் கல்யாண் தொகுதியில் ஸ்ரீகாந்த் ஷிண்டே போட்டியிடுவதற்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை என்றும்,  பாஜக ஷிண்டேவை ஆதரிக்கும் என்றும், கடந்த தேர்தலை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெறுவார் என்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார்.

Tags :
Eknath ShindeElection2024Elections with News7 tamilElections2024shiv senaShrikant Shinde
Advertisement
Next Article